விநாயகர் அகவல் விளைந்த கதை

விநாயகர் அகவல் விளைந்த கதை

 புராண காலத்தில் ‌திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர் ஒருவர் வாழ்ந்திருந்தார் அவர் சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு நெருங்கிய சிநேகிதர் ஆவார். ஒருசமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் துறந்து, கைலாயம் செல்ல திருவுளம் கொன்டு சிவபெருமானைப் போற்றிப் பாடித் துதித்தார். அவர் பிரார்த்தனையால் அகமகிழ்ந்த சிவ பெருமான் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல திருவுளம் கொன்டு ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் சுந்தர மூர்த்தி சுவாமிகளை அழைத்துவர அனுப்பினார். பெருமகிழ்வு கொன்டு சுந்தர மூர்த்தி சுவாமிகளும் யானை மீதேறி புறப்பட்டார்.அச்சமயம் வெளியில் சென்று திரும்பிய சேரமான் பெருமாள், வானில் இந்த அற்புதத்தை கண்டார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய விருப்பமில்லை. ஆகவே, தன் புரவியில் ஏறி அதன் செவியில் "சிவாயநம' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கி மின்னலெனப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் சேனைத் தலைவர்கள் அவரைப் பிரிய விருப்பமின்றி அனைவரும் தற்கொலை புரிந்து கொன்டனர். அவர்களது ஆத்மாக்களும் கைலாயத்தை நோக்கிப் புறப்பட்டன‌. இவ்வாறாக கைலாயம் நோக்கிச் சென்றுகொன்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், கழே நோக்கிட, ஓரிடத்தில் ஔவை பிராட்டியார் விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று கூப்பிட்டனர். பூஜையை முடித்து வருகிறேன் என ஓளவயும் பதில் கூறினாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என வினவினார். "நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விரும்பினால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார ஓளவை.  "ஔவையே! குழந்தைகளுக்காக எவ்வளவோ பாடிய நீ. தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றார், உடனே ஒளவை "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் அகமகிழ்ந்து ஒளவையை தன் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்றடைவதற்கு முன்னரே கொண்டு சேர்த்து விட்டார்.கைலாயத்தை அடைந்த பின்னர் ஔவையைக் கண்டு சுந்தரரும், சேரமான் பெருமாளும் வியந்து நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முழுமுதற்கடவுள். அவரை துதிப்போர் எல்லாவற்றிலும் முதன்மையாகத்தான் இருப்பார்கள் என்று பதிலளித்தார் ஒளவை. இவ்வகையில் பிறந்ததுவே "விநாயகர் அகவல்" என்னும் மதுர காவியம்.

3 கருத்துகள்:

Earn Staying Home சொன்னது…

மிக்க நன்று

Unknown சொன்னது…

விநாயகர் அகவல் பிறந்த கதையை முதல் முறையாக கேள்வி படுகிறேன் . தங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக

anmaai சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா அரிதான தகவல்..இதை போல் மேன் மேலும் இதை போன்ற சிறந்த தகவல்களை பதிவிடுங்கள் வாழ்க வளமுடன்

.


.

fallen leaves  ... Pictures, Images and Photos